காலி ஆவின் பால் கவர்களுக்கு காசு!ஆவின் பால் நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு!
நமது அன்றாட வாழ்வில் பால் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. அந்தவகையில் நாம் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீர் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். தினமும் நாம் பால் உபயோகித்து வருகிறோம்.
இந்நிலையில், தமிழக அரசு மறு சுழற்சி செய்ய முடியாத நெகிழி பொருட்களுக்குத்தடை விதித்த நிலையில், பால் உட்பட பிளாஸ்டிக் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஆவின் நிர்வாகம் சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில், ஆவின் பால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, காலி பிளாஸ்டிக் ஆவின் பால் கவர்களை, சில்லறை விற்பனை நிலையங்கள், நுகர்வோர் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட இடங்களில் கொடுத்தால், ஒரு கவருக்கு 10 பைசா வீதம்பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளது.