காவல்துறையினருக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்று பால் முகவர்கள் சங்கம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.இந்நிலையில் தற்போது அச்சங்கமும்-காவல்துறையினரும் சமாதானம் செய்து கொண்டதாகவும் , இனி காவல்ர்களுக்கு பால் விநியோகிக்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பேரிடர் காலமாக நிலவி வரும் தமிழகத்தில் அத்தியாவசிய உணவுப் பொருளான பாலினை விநியோகம் செய்யும் பால் முகவர்களுக்கும் காவல்துறையினர் தரப்பிலும் உரல் ஏற்பட்டது.
மேலும் முகவர்கள் சார்பில் தெரிவிக்கும் போது காவல்ர்கள் தரப்பில் இருந்து பல்வேறு இடையூறுகள் எங்களுக்கு ஏற்பட்டுவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியனர்.மேலும் இது குறித்து தமிழக அரசின் கவனத்திற்கும், காவல்துறை தலைவர் கவனத்திற்கும் கொண்டு சென்ற போதிலும் உரிய நடவடிக்கையினை அரசும்,காவலும் எடுத்தாக தெரியவில்லை என்று ஆதங்கப்பட்ட சங்க நிர்வாகி இதன் காரணமாகவே காவல்துறையினருக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்கிற முடிவை கனத்த இதயத்துடன் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அதற்கான அறிவிப்பை நேற்று காலை வெளியிட்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த அறிவிப்பால் ஒருபுறம் ஆதரவும்,மறுபுறம் மிரட்டலும் என எண்ணற்ற தொலைபேசி அழைப்புகள் வந்ததாக தெரிவித்த நிர்வாகி காவல்துறை தரப்பில் இருந்து தொலைபேசி வாயிலாகவும், நேரடியாகவும் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்களது நூதன போராட்டம் குறித்தும், பால் முகவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்ததோடு சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடமும் பேசி பால் முகவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்போம் என்று கூறினார்.
இதன் பிறகு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் விக்ரமராஜா இருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழகம் முழுவதும் பால் முகவர்கள் காவல்துறையினரால் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்ததோடு அது குறித்து விளக்கமாக பேசியதின் அடிப்படையில் சுமூக தீர்வு எட்டப்பட்டது.
மேலும் காவல்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் பேசியவர்கள் தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்து தமிழகம் முழுவதும் பால் விநியோகம் செய்யும் பால் முகவர்களுக்கு காவலர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் இச்சம்பவம் தொடர்பாக அவர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்ற உத்தரவாதத்தையும் அளித்ததாக தெரிவித்தார்.இந்நிலையில் உத்தரவாதத்தினை அடுத்து மீண்டும் காவலர்கள் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…