பால் மற்றும் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலை உயர்வு..!
ஆவின் பால் விலை தொடர்ந்து நெய் விலை தற்போது வெண்ணெய் விலை உயர்வு.
ஆவின் பால் விலை தொடர்ந்து நெய் விலை தற்போது வெண்ணெய் விலையை உயர்த்தி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அந்த வகையில், 500 கிராம் குக்கிங் வெண்ணெய் விலை, ரூ.255-லிருந்து ரூ.265-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 100 கிராம் குக்கிங் வெண்ணெய் விலை ரூ.52 லிருந்து, ரூ.55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது போமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.