பாலில் தண்ணீர் கலந்த விவகாரம் செயலாளர் பணியிடை நீக்கம்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பால் கூட்டுறவு சங்கத்தில் 55OO லிட்டர் பாலில் 600 லிட்டர் தண்ணீர் கலந்தது ஆய்வில் தெரிய வந்தது.
ஆரணி பால் கூட்டுறவு சங்க புகாரில் செயலாளர் சரவணன், வெண்டர் பழனி ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் மாவட்ட பால்வளத்துறை இணை இயக்குநர் இந்த புகாரை விசாரித்த பின்னர் செயலாளர் சரவணன் மற்றும் வெண்டர் பழனி இருவரையும் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.