மைக்ரோசாப்ட் விவகாரம் – சென்னையில் 2-வது நாளாக தொடரும் பாதிப்பு ..!
சென்னை : மைக்ரோசாப்ட் விண்டோஸை மென்பொருளை சார்ந்து இயங்கும் சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக இன்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கிரவுட்ஸ்டிரைக் நிறுவனமானது மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற பல்வேறு மென்பொருள் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், கிரவுட்ஸ்டிரைக் நிறுவனம் பால்கன் சென்சாரை நேற்று முன்தினம் (ஜூலை-18) அன்று அப்டேட் செய்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால், கிளவுட்சர்வர் தொழில்நுட்ப பயன்பாட்டைக் கொண்டு இயங்கி வரும் விமான சேவை உள்பட பல்வேறு பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் கடுமையான பாதிப்புகளை நேற்று முதல் எதிர்கொண்டது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த பாதிப்பானது ஏற்பட்டது, இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது விமான சேவைகள் தான்.
இதை பாதிப்பு தற்போது வரை நீடித்து வருகிறது, நேற்று இதன் விளைவாக சென்னையில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, இன்றைய நாளிலும் சென்னை விமான நிலையத்தில் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதன் காரணமாக விமான சேவையை நம்பி வந்த மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
நேற்றைய தினம் போல இன்றும் கூடுதல் ஊழியர்களின் உதவியோடு கைகளால் போர்டிங் பாஸ்கள் எழுதிக் கொடுக்கப்படுகின்றன. கவுண்டர்கள் முன் பயணிகளின் கூட்டம் ஏற்பட்டு உள்ளது. மேலும், இணையதள சேவையையும் விட்டுவிட்டு கிடைப்பதால் இன்றும் பாதிப்புக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோளாறு இன்று மதியதிற்குள் முழுமையாக சீரடைந்து விடும் என்று நம்புவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.