சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக “மைக்ரோ திட்டம்”
சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மைக்ரோ திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸின் தாக்கம், ஒரு நாளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தாக்கும் நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, அம்மாநகராட்சி நிர்வாகம் பல நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மைக்ரோ திட்டத்தை சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் மூலம், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள 200 உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் அடங்கிய குழுவை அமைத்தனர். அதுமட்டுமின்றி, சென்னையில் 11,500 பணியாளர்கள், தினந்தோறும் வீடு வீடாக சென்று, கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்வதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.