மிக்ஜாம் புயல் – 25 விரைவு ரயில்கள், புறநகர் ரயில் நாளை ரத்து..!
‘மிக்ஜாம்’ புயல் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து 80 கிலோமீட்டர் தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே நாளை பிற்பகல் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘மிக்ஜாம்’ புயல் சென்னையில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசை நோக்கி நகர்கிறது. தமிழ்நாட்டை விட்டு புயல் விலகி சென்ற நிலையில் சென்னையில் தற்போது மழை குறைய தொடங்கியுள்ளது.
புறநகர் ரயில் சேவை:
‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு காரணமாக அனைத்து வழித்தடங்களிலும் புறநகர் ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, சென்னை -திருவள்ளூர், கடற்கரை- வேளச்சேரி உள்ளிட்ட புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் காரணமாக புறநகர் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டு இருந்தது.
25 விரைவு ரயில்கள்:
‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு எதிரொலியாக சென்னையில் இருந்து 25 விரைவு ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத், சதாப்தி ரயில்கள், எழும்பூரில் இருந்து புறப்படும் நாகர, நாகர்கோவில் அந்த்யோதயா, குருவாயூர், மங்களூர், ராக்போர்ட், சேலம், விழுப்புரம், நாகர்கோவில் உள்ளிட்ட 25 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Cancellation of train services on 05.12.2023, passengers are requested to take a note on this #SouthernRailway #COMK #ChennaiFloods #ChennaRains #Chennai #CycloneMichuang #StaySafe pic.twitter.com/YXMNwpOH7W
— Southern Railway (@GMSRailway) December 4, 2023