‘மிக்ஜாம்’ புயல் எச்சரிக்கை – பொது சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு!

tn health

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. எனவே, இன்னும் 24 மணி நேரத்தில் புயல் (மிக்ஜாம்) உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த புயலானது ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5ம் தேதி கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் மிக்ஜாம் புயல் கரையை கடந்தாலும், தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வட கடலோர மாவட்டங்கள், ஒரு சில உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, மிக்ஜாம் புயலானது கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 100 கி.மீ. வரை காற்று வீச வாய்ப்பு உள்ளது. நாளை கடலூர், விழுப்புரம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.

டிச.4ம் தேதி திருவள்ளூர், செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்த சூழலில் புயல் மற்றும் கனமழை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்த நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தேவையான மருத்துவ பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும்.

அவரச கால மருத்துவ குழுக்கள், நிவாரண மையங்களில் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேவையான அளவு கிருமி நாசினி மருந்துகள், நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவரச கால மருந்துகளைத் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

மேலும், சுகாதார மையங்களில் 24 மணி நேரம் மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். போதிய எரிபொருள் உடன் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்