சென்னையில் இருந்து 100 கிமீ தொலைவில் விலகி சென்றது தீவிர புயலான மிக்ஜாம் புயல் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன்பின், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. சிறிது காலதாமதமாக புயலுக்கு மிக்ஜாம் புயல் என்று பெயர் சூட்டப்பட்டது.
இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை விடாமல் பெய்து வருகிறது, இதில், குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும், சென்னையில் மழை பாதிப்புகளில் சிக்கி இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மிக்ஜாம் புயலால் மிதக்கும் சென்னை… மாற்று உதவி எண்கள் அறிவிப்பு!
இதனைத்தொடர்ந்து, மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக மாறியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழை தொடரும் என்றும் இன்று இரவுக்கு பிறகு படிப்படியாக மழை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், தீவிர புயலாக மாறிய மிக்ஜாம் புயல் சென்னைக்கு கிழக்கே 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது.
அதுமட்டுமில்லாமல், 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல், மேலும் வலுப்பெற்று வடக்கு திசையில், தெற்கு ஆந்திரா பகுதிக்கு நகரக்கூடும் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இருந்து 100 கிமீ விலகி சென்றது தீவிர மிக்ஜாம் புயல். மணிக்கு 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த மிக்ஜாம் புயல், தற்போது 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆந்திராவில் நாளை முற்பகல் பாப்டலா என்ற இடத்தில் புயல் கரையை கடக்கும் என கூறப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…