‘மிக்ஜாம்’ புயல் -17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்..!

Tngovt

‘மிக்ஜாம்’ புயல் சென்னையில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசை நோக்கி நகர்கிறது. ஆந்திராவின் நெல்லூரில் இருந்து 80 கிலோமீட்டர் தென்கிழக்கில் ‘மிக்ஜாம்’புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வடக்கு திசையில் புயல் நகர்ந்து நாளை முற்பகல் ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்நாட்டை விட்டு புயல் விலகி சென்ற நிலையிலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவு வரை மழை நீடிக்கும் என்றும் அதன் பிறகு மழை குறையும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில், சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சியில் மழை பாதிப்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதலாக 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்  செய்யப்பட்டுள்ளனர்.

மூத்த  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டி.ஜெகந்நாதன், தர்மேந்திர பிரதாப் யாதவ், ஜே. குமரகுருபரன் உட்பட 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு  தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்