மிக்ஜாம் புயல் பாதிப்பு ஆய்வு.! முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இன்று மத்திய குழு முக்கிய ஆலோசனை.!

மிக்ஜாம் புயல் – கனமழை காரணமாக சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய மாவட்ட பகுதிகள் வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டது. புறநகர் பகுதி மக்கள் இன்னும் புயல் பாதிப்பில் இருந்து மீளாமல் தவித்து வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் இன்னும் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி தொடர்கிறது.
வெள்ள பாதிப்புகளை சரி செய்து நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு 5060 கோடி ரூபாய் கேட்டிருந்தது. இதனை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை வந்து வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார். அதன்படி, நேற்று முன்தினம் முதல், வடசென்னையில் ஒரு குழுவும், தென்சென்னை, மத்திய சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் ஒரு குழுவும், திருவள்ளூர் பகுதிக்கு ஒரு குழுவும் ஆய்வு செய்து வந்தனர்.
ஐயப்ப பக்தர்களின் அடிப்படை வசதி.! தமிழக முதல்வர் கோரிக்கை.. கேரள அரசு நடவடிக்கை.!
இதில் தென் சென்னை, மத்திய சென்னை ஆய்வு செய்த மத்திய அரசு குழுவானது நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசு வெள்ள பாதிப்பு சமயத்தில் சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டது எனவும், 2015ஐ காட்டிலும் மழை வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்த முறை சிறப்பாக இருந்ததாகவும், அதானல் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான உயிர்சேதமும் தவிர்க்கப்பட்டது.
சென்னை விமான நிலையம் மிக விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. மின்சாரம் வெகு விரைவாக வழங்கப்பட்டது. தொலைத் தொடர்புச் சேவை விரைவாகவே சீர் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மீண்டும் ஒருமுறை தமிழ்நாடு அரசினை மத்திய ஆய்வுக் குழு சார்பாக பாராட்டுகின்றேன். அதேநேரத்தில் தமிழ்நாடு அரசுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நாங்கள் உறுதுணையாக இருப்போம். எங்கள் அறிக்கையை நாங்கள் விரைவில் மத்திய அரசிடம் சமர்பிப்போம் என மத்திய அரசின் ஆய்வு குழுவினர் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தனர்.
அதே போல நேற்றும் மத்திய குழுவானது வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்தது. இரண்டு நாள் வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்த மத்திய குழுவானது இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்த உள்ளனர். அதில் மத்திய அரசிடம் நிவாரண தொகை பெறுவது பற்றி முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025
12ஆம் வகுப்பு தேர்வு : பறக்கும் படை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள்.., பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
March 3, 2025
2025 ஆஸ்கார் விருதுகள்! 5 விருதுகளை தட்டி தூக்கிய அனோரா!
March 3, 2025