நெல்லை மக்களவை தொகுதி அமமுக வேட்பாளராக போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு டிடிவி.தினகரன் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.சமீபத்தில் தினகரன் கட்சியில் இருந்து செந்தில்பாலாஜி திமுகவிற்கு சென்றார்.இது தினகரன் கட்சிக்கு பின்னடைவாக இருந்தாலும் அதை சமாளித்து மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிட்டது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.
ஆனால் தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் நெல்லை மக்களவை தொகுதி அமமுக வேட்பாளராக போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
நெல்லை மக்களவை தொகுதியில் முதலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் ஞான அருள்மணி.பின் இவருக்கு பதில் மைக்கேல் ராயப்பன் போட்டியிட்டார்.ஆனால் அவர் தோல்வி அடைந்தார்.நேற்று அமமுக வேட்பாளராக போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட 15 அமமுக நிர்வாகிகள், முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.இதனால் தினகரன் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…