டாஸ்மாக் கடையில் பாட்டில் பாட்டிலாக ஒயின் குடித்து சென்ற எலிகள்…!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் 10-க்கும் மேற்பட்ட ஒயின் பாட்டில்களை எலிகள் கடித்து அதிலுள்ள ஒயின்களை குடித்து சென்றுள்ளது.
கொரோனாவின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், தற்பொழுது ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் காலம்புழா பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை இன்று காலை அக்கதையின் மீட்பார்வையாளர் செந்திகுமார் அவர்களால் திறக்கப்பட்டுள்ளது.
அப்பொழுது கடைக்குள் பார்த்தபொழுது கடையில் இருந்த 12 ஒயின் பாட்டில் மூடிகள் சேதப்படுத்தப்பட்டு இருந்ததுடன் அதிலிருந்த ஒயின்கள் காலியாக இருப்பதையும் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எலிகள் தான் ஒயின் பாட்டில்களை கீழே தள்ளி மூடிகளை சேதப்படுத்தி அதில் இருந்த ஒயினை எடுத்து சென்றது தெரிய வந்துள்ளது. சேதமடைந்த 12 ஒயின் பாட்டில்களின் விலை 1900 என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மற்றும் குடிமகன்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.