எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள்….அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு…!!
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 102-வது பிறந்தநாள் விழா ஜனவரி 17-ம் தேதி கொண்டாடபட இருக்கின்றது. இந்நிலையில் ஜனவரி 18 முதல் 20 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.