மக்களால் என்றென்றும் போற்றப்படும் எம்.ஜி.ஆர் – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ட்வீட்
மக்களுக்காக பணிகள் செய்து மக்களால் என்றென்றும் போற்றப்படும் எம்.ஜி.ஆரை நினைவுக் கொள்வோம் என அமைச்சர் எல்.முருகன் ட்வீட்.
அதிமுகவின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான எம்ஜிஆரின் 34-வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. எம்ஜிஆரின் நினைவுதினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்குச் சென்று மலர்த்தூவி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
தமிழ்த் திரையுலகிலும், அரசியல் களத்திலும் பல வெற்றிகளைக் குவித்த எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினத்தை குறிப்பிட்டு, அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், திரையுலகில் தலைசிறந்த நடிகராக தனக்கென தனி தடம் பதித்து, அரசியலில் ஈடுபட்டு மக்களுக்காக பணிகள் செய்து மக்களால் என்றென்றும் போற்றப்படும் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களை நினைவுக் கொள்வோம் ன்று தெரிவித்துள்ளார்.
திரையுலகில் தலைசிறந்த நடிகராக!!
தனக்கென தனி தடம் பதித்து அரசியலில் ஈடுபட்டு மக்களுக்காக பணிகள் செய்து மக்களால் என்றென்றும் போற்றப்படும் பாரத ரத்னா #எம்ஜிராமச்சந்திரன் அவர்களை நினைவுக் கொள்வோம். pic.twitter.com/PatUpIurHT— Dr.L.Murugan (@Murugan_MoS) December 24, 2021