எம்ஜிஆர் பல்கலைக்கழகம்! துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் – தேடல் குழு அறிவிப்பு
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தரைத் தேர்வு செய்ய அறிவிப்பாணை வெளியீடு.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தேடல் குழு அறிவித்துள்ளது. துணைவேந்தர் பதவிக்கு தகுதியுள்ள கல்வியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்கலைக் துணைவேந்தரான சுதா சேஷையனின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய கடந்த ஜனவரி முதல் வாரத்தில் தேடல் குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான தேடல் குழு அறிவித்துள்ளது.