“கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்தவர் எம்ஜிஆர்” தவெக தலைவர் புகழாரம்.!

"தமிழக அரசியலின் அதிசயமானார் எம்ஜிஆர்" என தவெக தலைவர் விஜய் புகழ்ந்து கூறியுள்ளார்.

MGR Birthday - Vijay

சென்னை: முன்னாள் முதல்வரும் அதிமுக தலைவருமான எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. எம்ஜிஆரை மிஞ்சி பல சாதனைகளை சில முதல்வர்கள் செய்திருந்தாலும், இன்றைக்கும் மக்களை கவர்ந்த முதல்வராகவே எம்ஜிஆர் இருக்கிறார்.

இந்நிலையில், எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் வாயிலாக பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், தவெக தலைவர் விஜய் ‘தமிழக அரசியலின் அதிசயமானார்’ என எம்ஜிஆரை புகழ்ந்து கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின்அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்” எனப் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்