புதுச்சேரி எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தவர்களை கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர்-விழுப்புரம் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு நேற்று காவித்துண்டு அணிவித்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வையாபூரி மணிகண்டன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் அங்கிருந்து சென்றனர். மேலும், இது தொடர்பாக அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பழனிசாமி கண்டனம் தெரிவித்தனர். புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்து களங்கப்படுத்தியது மனவேதனை அளிப்பதாக தமிழக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.மேலும் சிலைக்கு அவமரியாதை ஏற்படுத்திய விஷமிகள் பிடித்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும் என்று புதுச்சேரி முதல்வருக்கு முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தினார்.
இந்நிலையில் புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்றும் காவித்துண்டு அணிவித்தவர்களை கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் திலக் வர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற…
சென்னை : விஜயின் கடைசி திரைப்படமான அவருடைய 69-வது படத்தினை இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த…
டெல்லி : இன்று 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தின விழா டெல்லியில், ராஜ்பதில் நடந்தது. குடியரசுத் தலைவர்…
சென்னை : நாட்டிற்காக உயர்நிலையில் சேவையாற்றியவர்களை கவுரவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் 8…
சென்னை : நாட்டிற்காக உயர்நிலையில் சேவையாற்றியவர்களை கவுரவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர்…