எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் மலர் தூவி மாரியாதை.!

Default Image

பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள், எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக தலைமை அலுவலகத்தில், மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வெற்றி சான்றிதழ் இபிஎஸ்-யிடம் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று தனது முதல் அறிவிப்பாக அதிமுகவில் உறுப்பினர்களை சேர்க்கும் படிவத்தை ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னர், மெரீனாவிலுள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி தனது மரியாதையை செலுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்