எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா..!10 லட்சம் பேர் பங்கேற்றதால் சென்னையே குலுங்கியது..! துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்
எம்ஜிஆர் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே இன்றைய வரலாறு மக்களை காக்கவே அதிமுகவை உருவாக்கினார் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், எம்ஜிஆர் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே இன்றைய வரலாறு மக்களை காக்கவே அதிமுகவை உருவாக்கினார். எம்ஜிஆர் அதிமுகதான் எப்போதும் ஆளும்; அதுவே வரலாறாக இருக்கும். இலங்கை இறுதிப் போரின் போது, திமுக – காங்கிரஸ் கூட்டணி என்ன செய்தது?என்று கேள்வி எழுப்பியுள்ளார். எத்தனை பெரிய கூட்டணி வந்தாலும் அதிமுக தொண்டர்கள் எங்களை வெற்றி பெற செய்வார்கள்.எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்டவர் ஜெயலலிதா. எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் 10 லட்சம் பேர் பங்கேற்றதால் சென்னையே இன்று(நேற்று ) குலுங்கியது என்றும் தெரிவித்துள்ளார்.