அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 19-ஆம் தேதி அதாவது நாளை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அதிமுக சார்பில் வழங்க உள்ளதாகவும் இந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
அதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவு..!
இந்நிலையில், எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறும் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழக நிறுவனத் தலைவர் ‘பாரத் ரத்னா’ புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட கழக முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 19-1- 2024 வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்பு பேருரை ஆற்றுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், 19 -1 -2024 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு 31-1-2024 புதன்கிழமை அன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றுவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…