எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு!
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 35-வது நினைவு நாளை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.இதன்பின் எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றுள்ளனர்.
குடும்ப அரசியல் நடத்தி கொடி பிடிக்கும் தொண்டனை துச்சம் என நினைப்பது திமுகவின் வாடிக்கை. திமுகவை வீழ்த்துவதில் வெற்றி கண்ட எம்ஜிஆர் காட்டிய பாதையில் திமுகவை வீழ்த்துவோம் என அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.