வாழ்க்கையிலும் கதநாயகன்..வாழ்ந்து காட்டிய எம்ஜிஆர் என்னும் சகாப்தம்… பிறந்த தினம் இன்று..!உடன்பிறப்புகள் கொண்டாட்டம்

Published by
kavitha
  • திரையுலகில் மட்டும் நான் கதநாயகன் இல்லை அரசியலிலும் கதாநாயகன் என்று நிருபித்த மாபெரும் சகாப்தம் பிறந்த தினம் இன்று.
  • சத்துணவு திட்டத்தை விரிவுப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர்

இன்று எம்.ஜி.ஆர் என்று மூன்று எழுத்து சொந்தக்காரருக்கு 103 வது பிற்ந்த நாள்.ஒரு நடிகராக எம்ஜிஆர் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் என்றால் ஆச்சரியபட வேண்டிய விஷயம் காரணம் இதை  வடமாநில நடிகர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.ஒரு முறை வடமாநில திரையுல ஜாம்பவான்களான ராஜேஷ்கன்னாவும் திலீப்குமாரும் கூட எம்ஜிஆர் படங்களை இந்தியில் ரீமேக் செய்கிறோம் அதில் அவரைப் போல நீங்கள்  நடிக்க வேண்டும் என்று கேட்டதற்கு எங்களால் எம்ஜிஆர்  போல நடிக்க முடியாது என தெரிவித்தனர்.

Image result for mgr images

எம்.ஜி.ஆர் என்றால் நல்ல சுறுசுறுப்புத்தனம், அந்த சிவந்த உதட்டின் ஒரத்தில் எப்பொழுதும் உற்சாக பொருந்திய சிரிப்பு, எந்த நடனத்திற்கும் ஈடுகொடுக்கும் நடனம், சண்டைப் பயிற்சி, மாறாக்கொள்கை,ஏழைகள் மீது கருணை மற்றும் தொழிலாளர்கள் மீது அன்பு கலந்த மரியாதை,தாய் மீது பக்தி, தேசத்தின் மீதும் மக்கள் மீதுமான சேவை ஈடுபாடு போன்ற எம்ஜிஆரின் பாத்திரங்கள் மக்களை வசீகரித்தது. திரையுலகில் எப்படி வேண்டுமானால் நடித்துக் கொள்ளலாம் ஆனால் நிஜவாழ்வில் அவ்வாறு இருப்பது சற்று கடினம் ஆனால் இதில் எம்.ஜி,ஆர் விதிவிலக்கு பல லட்சக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் வாழ வைத்தார் எம்ஜிஆர் என்றால் என்ன சொல்வது திரையில் மட்டும் கதநாயகன் இல்லை நிஜத்திலும் கதாநாயகன் தான் இன்றும் அவருடைய திரைப்படங்கள் மக்களால் விரும்பி பார்க்கப்படுகின்றன.அதிக பெண் ரசிகர்களை கொண்ட நடிகராக அந்தக்காலம் முதல் தற்போது வரை வலம்வருபவர்.

எம்.ஜி.ஆர் அரசியலிலும் ஆர்வமும் கொண்டவர் தன்னுடைய படங்களில் அரசுகளை விமர்சிப்பதும்,போற்றிப்படுவதும் உண்டு. பேரறிஞர் அண்ணா மீது அளவு கடந்த பற்றுக் கொண்டவர் அதன் காரணமாகவே திமுகவில் இணைந்தார் அதன் பின் ஒருகட்டத்தில் திமுகவில் இருந்து விலகி தானே சொந்தமாக அதிமுக என்ற கட்சியை  தொடங்கி அதில் வெற்றி மீது வெற்றிகளை குவித்து தமிழகத்தின் முதல்வராக 13 ஆண்டுகள் ஆட்சிகட்டை அலங்கரித்தார்.உடன்பிறப்புகளே என்று தனது தொண்டர்களை உறவினர்களாகவே பாவித்த உறவுக்கு சொந்தக்காரர்.

இவருடைய ஆட்சிக்காலத்தில் சிறப்பான  திட்டங்கள் எத்தனையோ இருந்தாலும் இன்றளவும் கொண்டாடப்படுகிற ஒரு திட்டம் சத்துணவு திட்டம்.ஏழைகளின் பசியை நன்கு அறிந்த எம்ஜிஆர் பள்ளிகளில் ஏழைப்பிள்ளைகளின் வயிற்றை நிரப்பிய பெருமைக்கு சொந்தக்கரர் இந்த சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்திற்கு பலலட்சக்காண பேர்கள் தங்களது  வாழ்த்துகளை தெரிவித்தனர்.இன்றும் அவருக்கு தீவிரமான ரசிகர் கூட்டம் உள்ளது எம்.ஜி.ஆர் என்றாலே இன்றும் தனி மரியாதை அன்பு காரணம் ஒரு மனிதன் எத்தனை காலங்கள் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை அவன் எப்படி வாழ்ந்தான் என்பதே இதை அறிந்தால் அவனுக்கு தோல்வி இல்லை என்று அதற்கு தகுந்தாற் போல் வாழ்ந்து காட்டியவர் எம்ஜிஆர். .  அவர் காலத்தையே வென்றவர் மட்டுமில்லை மக்களின் மனதையும் வென்ற கதாநாயகன்..

Recent Posts

மைதானத்தில் காலில் விழுந்த ரசிகர்! விராட் கோலியின் நெகிழ்ச்சி செயல்.! வைரலாகும் வீடியோ இதோ…

கொல்கத்தா : கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் மைதானத்தில் உள்ள பாதுகாப்பை மீறி தங்கள்…

43 minutes ago

ஜட்ஜ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு வீடியோ! அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?

டெல்லி : கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி டெல்லியில்  உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் நடந்த தீ விபத்து சம்பவம்,…

1 hour ago

CSK vs MI : சம்பவம் உறுதி! யாருக்கு ஜெயிக்க வாய்ப்பு? சென்னை., மும்பை…

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் எதிநோக்கும் மிக முக்கிய போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்…

2 hours ago

KKRvsRCB : கொல்கத்தாவில் வெற்றி கொடி நாட்டிய பெங்களூர்! கிங் கோலி படைத்த மிரட்டல் சாதனை!

கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா…

15 hours ago

என்னை விட்டுட்டோம்னு பீல் பண்ணுங்க! கொல்கத்தாவுக்கு அதிரடி மூலம் பதிலடி கொடுத்த சால்ட்!

கொல்கத்தா : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த வீரர்களில் பில் சால்ட் ஒருவர்.…

15 hours ago

இவரை எதுக்கு 23 கோடிக்கு எடுத்தீங்க? வெங்கடேஷ் ஐயருக்கு பயத்தை காட்டிய க்ருனால் பாண்டியா!

கொல்கத்தா : கடந்த சீசன் ஐபிஎல் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடிய காரணத்தால் இந்த முறை அவரை கொல்கத்தா…

16 hours ago