திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஜெ.அன்பழகன் மறைந்துவிட்டார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.
திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், அவரது உடல் நல்ல முன்னேற்றத்தில் இருந்து வந்ததாக தெரிவித்த மருத்துவர்கள், இரண்டு நாட்களுக்கு முன்பதாக மீண்டும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிக்கை வெளியிட்டனர். இதனையடுத்து, இன்று காலை 8.05 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஜெ.அன்பழகன் மறைந்துவிட்டார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. அன்பழகனின் மறைவுச் செய்தி இதயத்தில் இடியும், மின்னலும் ஒருசேர இறங்கியது போல் இருந்தது என்று தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…