மீண்டும் மேயருக்கு மறைமுக தேர்தல்! விரைவில் அவரசட்டம்! தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

Default Image

மாநகராட்சி மேயர் பதவிக்கு முதலில் மறைமுகமாக நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதாவது ஒரு மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுக்க கவுன்சிலர்கள் ஒட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள். நேரடியான தேர்தல் முறையென்றால், கவுன்சிலர் தேர்தல் போன்று, மேயரையும் மக்கள் ஒட்டு போட்டு தேர்ந்தெடுப்பர்.
கடைசியாக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி  தேர்தலில் மேயரை தேர்ந்தெடுக்க நேரடி தேர்தல் முறை கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்க மீண்டும் மறைமுக தேர்தல் முறையை அமல்படுத்த உள்ளனர். இதற்காக அவரச சட்டத்தை தமிழக அமைச்சரவையில் நிறைவேற்ற உள்ளனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வர உள்ள உள்ளாட்சி தேர்தலில்  15 மாநகராட்சிக்கு மேயர் பதவிக்காக மறைமுக தேர்தல் நடத்தி கவுன்சிலர்கள் மூலமாக தேர்ந்தெடுக்கபட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்