காவிரி – கோதாவரி இணைப்பு! தூர்வாரும் பணிகளை கவனிக்க ஒரு ஐஏஎஸ் அதிகாரி! முதல்வர் அதிரடி!
கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம்அதிகரித்ததன் காரமாக காவிரி டெல்டா பாசனத்திற்க்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைசார் எடப்பாடி பழனிசாமி திருந்து வைத்தார்.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து 8 மதகுகள் வழியாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது போகப்போக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் இன்னும் 3 நாளில் இந்த நீர் கல்லணையை சென்று சேரும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வு முடிந்ததும் பேசிய அவர், ‘ விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும். காவிரி – கோதாவரி ஆறுகள் இணைக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், ‘ காவிரி ஆறு செல்லும் இடத்தில் இருக்கும் ஏரி, கால்வாய் அனைத்தும் தூர்வாரப்படும், எனவும், தூர்வார 66 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தூர்வாரும் பணியினை கண்காணிக்க, பாலாஜி எனும் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைத்து மாவட்டந்தோறும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்