“மீண்டும் கனமழை கர்நாடகவில்”விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடி நீர்வரத்து”உயர தொடங்கும் மேட்டூர் அணை”…!!
நீர்வரத்து விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக மேட்டூர் அணைக்கு அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 23ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்வரத்து காலை 8மணிக்கு நேரப்படி விநாடிக்கு ஐயாயிரத்து 23கனஅடியாக இருந்தது. கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் காவிரியில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்ததுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மாலை 5மணி நிலவரப்படி து நொடிக்கு 23ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக ஆற்றில் விநாடிக்கு 22ஆயிரம் கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய்களில் விநாடிக்கு 806 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் தற்போது அணையின் நீர்மட்டம் 104 புள்ளி 47 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 70 புள்ளி 75 டிஎம்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU