மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 305 கன அடி அதிகரித்துள்ளது!
மேட்டூர் அணையில் நீர்வரத்து 3,839 கனஅடியிலிருந்து அதிகரித்து 4,144 கன அடியாக உள்ளது.
கடந்த சில மாதங்களாக பல இடங்களில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்பட்டதால் மேட்டூர் அணை நிரம்பி வழிந்தது. இந்நிலையில் தற்பொழுது சில இடங்களில் மழை பொழிவு குறைந்த காரணத்தால் மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைந்தது. ஆனால், தற்போது மேட்டூர் அணையில் வினாடிக்கு 3,839 கன அடியிலிருந்து தற்போது 4,144 கன அடியாக உயர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 800 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. மேலும், டெல்டா பாசனத்துக்காக 16,000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.717 கன அடியாகவும் நீர் இருப்பு 53 . 46 டிஎம்சி ஆகவும் உள்ளது.