தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு!
தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் நீர் தேவை குறைந்துள்ள காரணத்தால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி குருவை சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்கள் அனைத்திலும் தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளது.
எனவே கடந்த 15ம் தேதி நீர்திறப்பு 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. மேலும் 16 ஆம் தேதி 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது, அதைத்தொடர்ந்து தற்போது 7 ஆயிரம் கன அடி மட்டுமே நீர் திறந்துவிடப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் பாசனம் தேவை குறைந்துள்ளது என்பதால் தான் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.