மேட்டூர் அணை இன்று இரவுக்குள் 1.5 லட்சம் கன அடியை எட்டும்-ஜல்சக்தி துறை அமைச்சகம் அறிக்கை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று இரவுக்குள் 1.5 லட்சம் கன அடியை எட்டும் என்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்து வருகிறது.கர்நாடகா,கேரளம் மற்றும் தமிழகத்தில் உள்ள நீலகிரி ,கோவை ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
மழை காரணமாக அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.இதன்காரணமாக அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்படுகிறது.இந்நிலையியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று இரவுக்குள் 1.5 லட்சம் கன அடியை எட்டும் என்று தெரிவித்துள்ளது.
கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படவுள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.நாளை மாலைக்குள் மேட்டூர் அணை 2.40 லட்சம் கன அடியை எட்டும் என்றும் தெரிவித்துள்ளது.