கனமழை எதிரொலி..!! 71-வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை ..!

Mettur Dam

மேட்டூர் அணை : கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள அணைகள் முழுமையாக நிரம்பியது. அதிலும், காவேரி ஆற்றின் முக்கிய அணைகளாக இருக்கும் கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை மற்றும் நுகு அணை ஆகிய எல்லா அணைகளும் நிரம்பியது.

இதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது, இதன் விளைவாக அணையின் நீர்மட்டம் தற்போது 405 நாட்களுக்குப் பிறகு, 71-வது முறையாக  100 அடியை எட்டி இருக்கிறது.

நேற்று 45, 598 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.10 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், காலை 9.15 மணியளவில் 100 கன அடி நீர்மட்டத்தை எட்டியது. இதனால் மேட்டூர் அணை மிகவிரைவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், நீர்வரத்து அதிகரித்து வருவதால் வெள்ள அபாய அடுத்து கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், ஆகிய 9 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்