ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பு!
ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சேலம் மாநகரில், கலைஞர் சிலை திறப்புவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் தொடக்க விழாவில் கலந்துக் கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 11ம் தேதி சேலம் செல்கிறார்.
அப்போது, ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே மே 24-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, வர மாதம் 12-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.