மேட்டூர் அணையில் மீன்கள் டன் கணக்கில் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி!
மீன்கள் டன் கணக்கில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செக்கானூர் தடுப்பணையில் தடுக்கப்பட்டு மின்னுற்பத்தி நடைபெறுகிறது. இந்த இடைப்பட்ட பகுதியில் நாட்டாமங்கலம், காவிரி கிராஸ், மாதையன்குட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.
இந்தப் பகுதியில் காவிரி ஆற்றின் இரு புறத்திலும் டன்கணக்கில் ஜிலேபி, கட்லா, ரோகு உள்ளிட்ட மீன்கள் இறந்து கரையொதுங்கிக் கிடக்கின்றன. இந்தப் பகுதி நீரைக் கொண்டுதான் பல சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது என்ற நிலையில் இன்றைக்குள் மீன்கள் அகற்றப்படாவிட்டால், தண்ணீர் சுகாதாரச் சீர்கேடு அடைந்து நீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்று கூறும் மக்கள் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.