கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மேட்டூர் அனல்மின் நிலைய பணிகள் தொடக்கம்.
உலக அளவில் கொரோனா வைரஸ் தீவிரமான முறையில் தனது தாக்குதலை நடத்தி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில், உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. உலக அளவில் இதுவரை 4,181,218 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த கொரோனா வைரஸை தடுப்பதற்கு இந்தியா முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பி வருகிற நிலையில், மேட்டூர் அனல்மின் நிலையத்தின் 2-வது பிரிவில் மீண்டும் மின்உற்பத்தி பணிகள் தொடங்கியுள்ளது. அனல்மின் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது.
ஜெய்ப்பூர் : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், M.S.தோனி தலைமையிலான சென்னை…
லக்னோ : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற…
ஆந்திரா : ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஜ்னேவா தனது மகன் தீ விபத்தில் சிக்கி உயிர்தப்பியதற்கு…
சென்னை : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தார்.…
லக்னோ : சென்னை அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. 180 ரன்களுக்கு…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் வட்டாரம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உதாரணமாக, மத்திய அமைச்சரும், பாஜக…