சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான கோர சம்பவம்! நில உரிமையாளருக்கு ஜாமீன்!

- மேட்டுப்பாளையத்தை சிவசுப்பிரமணியன் என்பது வீட்டு சுவர் டிசம்பர் 2ம் தேதி கனமழை காரணமாக இடிந்து விழுந்தது
- இந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் சிவசுப்ரமணியதிற்க்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் டிசம்பர் 2ஆம் தேதி சிவசுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமான வீட்டை சுற்றியுள்ள 20 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவரானது கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. அப்போது அந்தச் சுற்று சுவரை ஒட்டி இருந்த வீடுகளில் அந்த சுற்றுச்சுவர் விழுந்தது. இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்து விடிந்த பிறகுதான் பலருக்கும் தெரிய வந்தது.
இந்த சம்பவத்தையடுத்து வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியன் டிசம்பர் 3-ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் போலீஸார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு ஜாமின் வேண்டி மனு கொடுத்திருந்தார்.
அந்த மனுவில், கனமழை காரணமாக தன் வீட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக எந்தவித போலீசார் விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிப்பேன் என உறுதி கூறுகிறேன். என கூறப்பட்டிருந்தது. இந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, வீட்டு உரிமையாளர் சிவசுப்ரமணியத்திற்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். ஒரு லட்ச ரூபாய் பணத்தை பிணைத்தொகையாக கட்ட சொல்லியும், மதுரை நீதிமன்றத்தில் கையெழுத்திட சொல்லியும் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025
வழக்குக்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம்! அன்புமணி பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!
February 24, 2025
மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!
February 24, 2025