கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் குறித்த தேதியில் காவேரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படுகிறது.
மேட்டூா் அணைப்பாசனம் மூலம் 12 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கா் நிலங்கள் பயன்பெறுகிறது. மேட்டூா் அணையில் இருந்து வருடந்தோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை பாசனத்துக்கு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை 15 முறை மட்டுமே குறித்த தேதியான ஜூன் 12-ம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
மற்ற வருடங்களில் அணையின் நீா் இருப்பு போதிய அளவு இல்லாததால் தாமதமாகவே தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடியாக உயா்ந்தது. அதன் பிறகு தொடர்ந்து 100 அடிக்கு குறையாமல் தண்ணீர் இருந்து வருகிறது. அதனால், குறித்த நாளான ஜூன் 12-ம் தேதி மேட்டூா் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படுகிறது.
இந்த, 230 நாள்களில் விவசாயிகளுக்கு 330 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் மேட்டூர் அணையின் வலது கரையின் மின்விசை மூலம் அணையின் மேல் மட்ட மதகுகளை உயர்த்தி தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார்.
கடைசியாக 2008-ம் தான் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் குறித்த தேதியில் தண்ணீா் திறக்கப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு அணையின் நீா் இருப்பும், வரத்தும் அதிகமாக இருந்ததால் ஜூன் 12-ம் தேதிக்கு முன்பாகவே பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…