தற்பொழுது சென்னை மெட்ரோ ரயிலுக்கு அதிகளவில் மக்கள் வரத்தொடங்கினர். இதனால் பல முயற்சிகளை மெட்ரோ நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக, 10 ரூபாய்க்கு கேப் வசதி ஆரமிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை சென்னை மெட்ரோ, பெங்களூர் மெகா கேப்ஸ் என்ற ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்தி வருகிறது. இதற்கென ஒரு செயலியையும் உருவாகியுள்ளது.
அந்த செயலியில் தங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு அருகிலுள்ள நிறுத்துமிடத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், அவர்கள் இருக்கும் மெட்ரோ நிலையத்தில் இருந்து தேர்வு செய்த இடத்திற்கு அழைத்து செல்கிறது. இது நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் மட்டுமே நிறுத்தும் இடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை, 10 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
இந்த சேவையை நத்தம் மெட்ரோ நிலையத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சண்முகம் தொடங்கி வைத்தார். இதுமட்டுமின்றி, அங்கு மின்சார வாகனத்தை சார்ஜ் செய்யும் வசதியும் தொடங்கிவைக்கப்பட்டது.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…