சென்னையில் இன்று முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் அறிவுறுத்தல்களின் படி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் இன்று முதல் வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) காலை 05.30 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயக்கப்படும். நெரிசல்மிகு நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ இரயில் சேவைகள் இயக்கப்படும்.
அனைத்து முனையங்களிலிருந்தும் கடைசி மெட்ரோ இரயில் சேவை இரவு 09.00 மணிக்குத் தொடங்கி இரவு 10.00 மணிக்கு முனையத்தை வந்தடையும். கூடுதலாக சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் வருகின்ற 09.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.
சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…
சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…