தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நாளை முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வரும் நிலையில் பண்டிகை காலங்களை முன்னிட்டு ரயில்களை இரண்டு மணி நேரம் கூடுதலாக இயக்கவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் ஏற்கனவை தெரிவித்திருந்தது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு நாளை முதல் மெட்ரோ ரயில்களின் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உச்ச நேரங்களில் 7 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மேலும் அரசு விடுமுறை தினங்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் உச்ச நேர இடைவெளியின்றி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது . எனவே பயணிகள் அனைவரும் முககவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றி பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…