மெட்ரோ ரயில் பயணம்.. ரூ.1 லட்சம் மதிப்புள்ள பரிசு கூப்பன் – 30 பயணிகளுக்கு பரிசு!

Published by
பாலா கலியமூர்த்தி

கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களில் குழுக்கள் முறையில் தேர்வான 30 பயணிகளுக்கு பரிசு.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு கூப்பன் அல்லது பரிசு பொருள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு வழங்கபடும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த மாதம் மார்ச் 21-ம் தேதி முதல் இம்மாதம் ஏப்ரல் 20-ம் தேதி வரை பயணம் செய்த பயணிகளுக்கான மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கல் நேற்று கோயம்பேடு மெட்ரோ இரயில் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் முன்னிலையில் நடைபெற்றது. அதன்படி, ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் மற்றும் 30 நாட்களுக்கான விருப்பம்போல் பயணம் செய்வதற்கான மெட்ரோ பயண அட்டை (ரூ.2,500 மற்றும் ரூ.50/ வைப்புத்தொகை மதிப்புள்ள) வழங்கப்படவுள்ளது.

மாதம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1500, அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000 மதிப்புள்ள பரிசு வழங்கப்படவுள்ளது. மெட்ரோ பயண அட்டை வாங்கி அதில் குறைந்தபட்சத் தொகையான ரூ.500-க்கு டாப் அப் செய்த 10 பயணிகளுக்கு தலா ரூ.1,450 மதிப்புள்ள இலவச டாப் அப் மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நபர்களுக்கும் மார்க் மெட்ரோ சார்பாக பரிசு பொருள் அல்லது பரிசு கூப்பன் விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பு பரிசு கூப்பன் திட்டங்கள், பயணிகளை ஊக்குவிக்கவும், பயனளிக்கவும் சென்னை மெட்ரோ இரயிலில் பயணிகள் தங்களது பயணத்தை தொடர்ந்து பயணிக்கவும் அடுத்த மாதமும் தொடரும் என்றும் அடுத்த மாதத்திற்கான குலுக்கல் (21.04.2022–20.05.2022) மே 21, 2022 அன்று நடத்தப்படும் என்றும் சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

20 minutes ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

52 minutes ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

2 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

2 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

3 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

5 hours ago