இரண்டாம் கட்ட திட்டத்திற்கான மெட்ரோ ரயில் திட்டத்தின் வரைபடம் வெளியீடு!
அதிகாரப்பூர்வமாக, மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் சார்பாக சென்னையில் முதற்கட்ட வழித்தடம் 2 வழித்தடங்களுடன் 54 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டு வருகின்றது. இதனிடையே இரண்டாம் கட்டமாக சென்னையில் 3 வழித்தடங்களில் 104 ரயில் நிலையங்கள் அமையவுள்ளது.
இதற்கான 108 கிமீ தூரத்திற்கான ரயில் திட்ட வரைபடத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் உயர்மட்ட, சுரங்க வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.
இதற்காக 85 ஆயிரம் கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டுடன் மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த திட்டத்தில் முதற்கட்டத்திற்கு நிதியுதவி அளித்த ஜப்பான் நிதிநிறுவனம் நிதியுதவி அளிப்பது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.