மெட்ரோ ரயிலே சைக்கிள்.! இனிமே கவலையே இல்ல, எங்க வேணாலும் போகலாம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • சென்னையில் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகளை செய்து வரும் மெட்ரோ ரயில் நிர்வாகம், தற்போது மெட்ரோ ரயிலில் சைக்கிள்களை கொண்டு செல்லலாம் என அறிவித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், தற்போது 42 கி.மீ தூர வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகளை செய்து வரும் மெட்ரோ ரயில் நிர்வாகம், தற்போது மெட்ரோ ரயிலில் சைக்கிள்களை கொண்டு செல்லலாம் என அறிவித்துள்ளது. அதாவது, மெட்ரோ ரயில் பயணிக்கும் பயணிகள், தங்களது பயணத்தின் போது சைக்கிள்களை தங்களுடன் எடுத்துச் செல்ல சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், அந்த சைக்கிள் சிறியதாகவும், கையில் எடுத்துச் செல்ல வசதியாகவும் இருக்க வேண்டும். பயணிகள் யாருக்கும் இடையூறு ஏற்படுத்தாமலும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வாகனத்தை பொதுமக்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையிலும், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரவும், ரயிலில் இருந்து இறங்கி அலுவலகம் சென்று சேரவும் மாற்று வாகனத்துக்கு அல்லது ஆட்டோவுக்கு செலவிடப்படும் தொகையைக் குறைக்கவும் இந்த வாய்ப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பிற இடங்களுக்கு செல்லும் போக்குவரத்து செலவு குறைவதால், பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள் என்றும், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

பேட்டிங்கில் மிரட்டல்…பவுலிங்கில் அசத்தல்! ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத்!

அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…

5 hours ago

நீட் தேர்வில் மோசடி…தி.மு.க மன்னிப்புக் கேட்க வேண்டும்! த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்!

சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…

6 hours ago

ராஜஸ்தான் பந்துகளை ராக்கெட் விட்ட சாய் சுதர்சன்! குஜராத் வைத்த பெரிய இலக்கு?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…

7 hours ago

விரைவில் மருந்துகளுக்கு பெரிதளவில் இறக்குமதி வரி! அதிபர் ட்ரம்ப் அலர்ட்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…

7 hours ago

“இலவு காத்த கிளி போல இபிஎஸ் காத்திருந்தார்!” திருமாவளவன் கடும் விமர்சனம்!

சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…

10 hours ago

உஷார் மக்களே.., ஜிப்லி-க்காக போட்டோ கொடுக்கிறீங்களா? சைபர் கிரைம் எச்சரிக்கை!

சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…

11 hours ago