மெட்ரோ ரயில் நிலையங்களில் பாரம்பரிய கலை நகழ்ச்சிகள்… மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு… நிகழ்ச்சிகளின் பட்டியல் உள்ளே..

Default Image
  • சென்னையில், மெட்ரோ ரயில்நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயிலில்  நான்கு நாட்களிக்கு  இசை நிகழ்ச்சி நடத்த   மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • இதில் தமிழ்கலாச்சாரம் குறித்த கலை நிகழ்ச்சிகள் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெறும் என அறிவிப்பு.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக சென்னை முழுவதும் உள்ள பல இசைக் கலைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து சென்னை மக்களுக்கு தமிழ் கலாச்சாரத்தின் இசை மற்றும் கலைநிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.

Image result for metro train cultural program in chennai

இதன் தொடர்ச்சியாக இன்று முதல் வரும் பிப்ரவரி 2ம் தேதி வரை பல பாரம்பரிய  நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில், சென்னை கலைத்தெரு விழா குழு என்ற குழு மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பின்வரும் தேதிகளில் கலைநிகழ்ச்சி நடைபெறும் என மெட்ரோ நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில்,

இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை

  • விமானநிலையம் மற்றும் வண்ணாரப் பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒயிலாட்டம்- விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் ஒத்த செவுரு- தமிழ் ராக் பேண்ட்

Image result for ஒயிலாட்டம்

  • சோலோ தியேட்டர் சுனந்தா, பரத் நாராயண் குழுவினர் கர்நாடக இசை நிகழ்ச்சி
  • (விமான நிலைய மெட்ரோ முதல் வண்ணாரப் பேட்டை மெட்ரோ வரை) காலை 11.30 மணிக்கு வண்ணாரப் பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் தேவராட்டம் மற்றும் தப்பாட்டம் நடைபெறுகிறது.

ஜனவரி 27ம் தேதி மாலை 5 மணிக்கு

  •  ஆன்மஜோதி என்ற அமைப்பு, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் கர்நாடக குவார்டெட் என்ற இசை நிகழ்ச்சியை வழங்க உள்ளது.

ஜனவரி 27ம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை

  • சத்தியபாமா ரோட்டராக்ட் கிளப்பின் உறுப்பினர்கள், சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து விமான நிலைய மெட்ரோ வரை மெட்ரோ ரயிலில் இசை நிகழ்ச்சியை வழங்குகின்றனர்.

ஜனவரி 30ம் தேதி மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை

  • ஆலந்தூர் மற்றும் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம்) ஆலந்தூர் மெட்ரோ முதல் சென்ட்ரல் மெட்ரோ வரை மெட்ரோ ரயிலில் மாலை 5 மணிக்கு- அபிஷேக்கின் ஸ்டாண்ட் அப் காமடி மற்றும் பிந்துமாலினியின் மெல்லிசை நிகழ்ச்சி,
  • மாலை 5.45 மணி முதல் 6.30 மணி வரை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், பிரீத்தி பரத்வாஜின் பாரத நாட்டியம் மற்றும்
  • தீபனின் பறையாட்டம் (தெருநிகழ்ச்சி) நடைபெறும்.

பிப்ரவரி 2ம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணிவரை

  • ஆன் தி ஸ்டீரிட் ஆப் சென்னை, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இசை நிகழ்ச்சியை வழங்க உள்ளனர். இவ்வாறு மெட்ரோ நிறுவனம் தற்போது  அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்