#MeToo மூலம் பெண்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது…! மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
MeToo மூலம் பெண்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், ‘நானும்தான்’ (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பு வேண்டும். MeToo மூலம் பெண்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது. குற்றச்சாட்டு நிரூபிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.