சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) புயல் காரணமாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து மழைநீர் தேங்கி நிற்கினது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மிக்ஜாம் புயலின் தற்போதைய நிலை… வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்.!
மிக்ஜாம் புயல் தற்போது சென்னை விட்டு விலகி 170 கிமீ தொலைவில் இருந்தாலும், மழையின் தாக்கம் முழுதாக குறையவில்லை. இன்று காலை 10 மணி வரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரையில் மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயலானது தற்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து வடக்கே 30 கிமீ தொலைவிலும், சென்னையில் இருந்து 170 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதனால் மிக கனமழை பாதிப்பு என்பது குறைத்துவிட்டது . இனி மழையளவு படிப்படியாக குறைந்துவிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிக்ஜாம் புயலானது வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திர மாநிலம் தெற்கு கடற்கரை பகுதியான பாபட்லா கடற்கரை பகுதியில் இன்று முற்பகல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.