ரெட் அலர்ட்.. 6 மாவட்டங்களில் மிக கனமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்.!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் வேளையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தமிழத்தில் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் நிர்வாக காரணங்களுக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நேற்று மாலை முதல் தற்போது வரையில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்தாண்டு பருவமழைக்கு என்னென்ன முன்னெச்சரிக்கைகள்.? அமைச்சர் விளக்கம்.!
இன்று, நாகை, மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு கனமழை குறிப்பிட்டு நிர்வாக காரணங்களுக்காக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் சென்னையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் நவம்பர் 16 நாளை மறுநாள் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.