இன்று 10 மாவட்டங்களில் மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்.!
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த மாதம் அக்டோபரில் தொடங்கி தற்போது வரையில் பெய்து கொண்டு இருக்கிறது. இதில் வங்கக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் குமரிக்கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு 8 மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
கனமழை தொடரும்.. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
இன்று வெளியான வானிலை தகவலின்படி, தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும்,
விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என்றும், மேற்குறிப்பிட்டதில் பல்வேறு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.