12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. பள்ளிகளுக்கு விடுமுறை.!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மாதம் முதலே பெய்து வருகிறது. வங்ககடலில் உருவான வளிமண்டல சுழற்சி, குமரிக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சி காரணமாகவும் தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த 3 மணிநேரம் மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
வரும் 27ஆம் தேதி வா தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் எனவும், அதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை நேற்று இரவு சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமடைந்து இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது . இன்னும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணத்தால் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல செங்கல்பட்டிலும் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக, நேற்றே காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது. மற்றபடி சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள் இன்று (சனிக்கிழமை) வழக்கம் போல இயங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.