மிக்ஜாம் புயல்.! 23 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டார பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. 130 கிமீ தூரத்தில் உள்ள புயலாந்து 14கிமீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருவதால் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஆந்திர மாநிலம் நெல்லூர், மசூலிப்பட்டினம் இடையே நாளை காலை புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் நேற்றும் இன்றும் சென்னை சுற்றுவட்டார பகுதியில் அதீத கனமழை காரணமாக நிர்வாக காரணங்களுக்காக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. நேற்றிரவு தொடங்கிய கனமழை காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வேகமெடுக்கும் புயல்..! சென்னையை புரட்டி போட்ட கனமழை.! பொதுமக்கள் கவனத்திற்கு….
சென்னை , செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதியில் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் , மயிலாடுதுறை, தஞ்சாவூர் , அரியலூர், பெரம்பலூர், வேலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025