தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேரத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக இரவு வேளைகளில் தான் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது மேலும் வலுவடைந்து உள்ளது என்றும், இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் கேரளா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதே போல, வடக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்துள்ளளது என்றும்,
வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசா, மேற்கு வங்கத்தை நோக்கி நகரும் எனவும், இதனால், ஒடிசா, மேற்கு வங்கம் மட்டுமின்றி, தமிழக்த்தில் கடலோர மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், தென்காசி, திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கோவை, திருநெல்வேலி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் அக்டோபர் 6ஆம் தேதி வரையில் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், அக்டோபர் 1,2 ஆகிய தேதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய கூடும் என்றும், சென்னையில் அடுத்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…